500 கிலோ சிக்கன், 800 கிலோ மட்டன், 100 கிலோ ஃபிஷ் ஃப்ரை… ஆர்.கே.நகரை அதகளப்படுத்தும் அமைச்சர்கள் பட்டாளம்! செமத்தியான கவனிப்பால் குஷியில் வாக்காளர்கள்!! சென்னை, டிச 12-

ஆர்.கே.நகரில் அமைச்சர்களின் செமத்தியான கவனிப்பால் குஷியாகி உள்ளனர் வாக்காளர்கள்.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த மது விருந்தோடு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ஃபிங்கர் ஃபிஷ், ஃபிஸ் ஃப்ரை என கொடுத்து அமர்களப்படுத்தியுள்ளனர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள். பிரசாரத்துக்காக ஆளுங்கட்சி தரப்பிலிருந்து தமிழகம் முழுவதிலுமிருந்து கட்சியினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் கட்சியினர், தேர்தல் வேலைகளில் பம்பரமாக ஈடுபட்டுவருகின்றனர். இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாபடி வாக்காளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுகின்றனர்.
முதல்கட்டமாக ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை ஆளுங்கட்சியனரால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஆளுங்கட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அந்தப்பகுதியில் உள்ள கட்சியினர் மூலம் எவ்வித தடையுமின்றி வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்று தடவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சியினர் அதிகாலை நேரத்தில் பணப் பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்காளர்களைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல் கட்சியினரையும் தேர்தல் பொறுப்பாளர்களான சில அமைச்சர்கள் சிறப்பாக கவனித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆளுங்கட்சி தொண்டர்களுக்கு மது விருந்தோடு அசைவ உணவுகளைக் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியின் அருகில் உள்ள ராயபுரம் தொகுதியில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர். அவர், 80க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தனர். அவருக்குப் போட்டியாக 100 கிலோ வஞ்சிரம், வவ்வால் மீன் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் இன்னொரு அமைச்சர். ஃபிங்கர் ஃபிஷ், ஃபிஸ் ஃப்ரை என கொடுத்து அமர்களப்படுத்தியுள்ளனர்.
மூத்த அமைச்சர் ஒருவர், 500 கிலோ சிக்கன் பிரியாணி தயாரித்து தொண்டர்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஆர்.கே.நகர் தொகுதியில் பவர்புல்லாக பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் அமைச்சர் ஒருவர். இவ்வாறு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் போட்டிபோட்டு விருந்து உபசரிப்பால் தொண்டர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர். விருந்தோடு மட்டுமல்லாமல் மதுவுக்கும் தாராளமாக செலவு செய்யப்படுகிறதாம்.

Leave a comment

Your email address will not be published.


*