31 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

மே 04

சீனாவில் ஷென்சென் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு மூன்று மாதம் முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதனால் மிகவும் சந்தோஷப்பட்ட அவர்களுக்கு, ஒரு சோக நிகழ்வும் நடந்தது.

அதாவது அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் 31 விரல்கள் இருந்துள்ளது. ஒரு கையில் 8 விரல்களும், மற்றொன்றில் 7 விரல்களும், ஒவ்வொரு காலிலும் 8 விரல்கள் என மொத்தம் 31 விரல்களுடன் அந்த குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கை மற்றும் கால்களில் பெருவிரல்கள் இல்லை.

ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோல் பிறப்பதாக சீன மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அக்குழந்தையின் தாய்க்கும் இதுபோல் அதிக விரல்கள் உள்ளன. எனவே மரபு வழியாக இப்படி குழந்தை அதிக விரல்களோடு பிறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

அந்த குழந்தையை அனைவரும் ‘ஹாங்காய்’ என்று அழைக்கிறார்கள். கை, கால்களில் விரல்கள் அதிகமாக இருப்பதால் அந்த குழந்தை மிகவும் சிரமப்படுவதாகவும், தகுந்த சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய அவனின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

அக்குழந்தையின் தந்தை ஏழை என்பதால், தனது மகனின் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.


*