பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி,மே-6

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா 8நாட்கள் நடைபெற்றது. கடந்த மாதம் 29ம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது.அன்று முதல் நேற்று 6ம் தேதி வரை விழாக்குழு, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், வருவாய்த்துறை, தபால்துறை, பத்திரப்பதிவு, ஆட்டோ,மினிஆட்டோ, கார்,வேன்,லாரி,சுமோ ஓட்டுநர்,உரிமையாளர்கள் சங்கம், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம், நாட்டுக்கல்வீதி, பாரமேடுவீதி, வலையபட்டி, பொன்.புதுப்பட்டி, புதுவளவு,பாண்டிமான்கோவில் தெரு, இந்திராநகர், அண்ணாநகர்,பெரியார்நகர், அம்மன்கோயில்வீதி,அம்மன்சன்னதி ரோடு,பூக்குடிவீதி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துச்சென்று வழிபாடு செய்தனர். பல இடங்களில் இசை நிகழச்சி நடைபெற்றன. பொன்னமராவதி போலீசார்; பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஒருவாரா காலமாக பொன்னமராவதியே பெரும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது

Leave a comment

Your email address will not be published.


*