பெரியாறு அணை பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பின்வாங்க மாட்டேன்:வைகோ

கம்பம்,மே.10:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கம்பத்தில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஞாயற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரித்து பேசியபோது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் நிலைப்பாடு மாற்று கருத்தாக இருந்தாலும் நான் போராட்டத்திலிருந்து எப்போதும் பின்வாங்கமாட்டேன் என்று வைகோ பேசினார்.
கம்பம் அரசமரம் அருகே ஞாயற்றுக்கிழமை இரவு கூட்டணி கட்சியான தமாகா வேட்பாளர் ஓ..ஆர்.ராமச்சந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:- கம்பத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஒரு உத்தமனுக்கு, யோக்கியனுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள முயன்றபோது, கட்சி கொடி இல்லாமல் 658 கிராமங்களில், அணை உடைந்தால் பசியும், பட்டினியுடன் நம் பகுதி பாலைவனமாகும் என்ற வீட்டுக்கு ஒருவர் புறப்பட்டு வாருங்கள் என்று மக்களை திரட்டினேன். தமிழக-கேரள 13 சாலைகளை மறித்தோம். தமிழக வியாபாரிகள் பொருட்களை அனுப்பவில்லை, விவசாயிகளை விளைபொருட்களை அனுப்பவில்லை கேரள ஸ்தம்பித்தது. தொடர் போரட்டத்தின்போது, 3 முறை சிறை பிடிக்கப்பட்டேன். அணை பராமரிப்பு பணிக்கு சிமிண்ட் லாரியினை அனுமதிக்க மறுத்த கேரள அரசினை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தினோம்.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கேரள மார்க்சிஸ்ட் புதிய அணை என்ற நிலைபாட்டினை கொண்டுள்ளது. நாங்கள் கூட்டணியில் இருந்தாலும், நியூட்ரினோ, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எதிர் கருத்துகளை கொண்டிருந்தாலும், நான் என் கொள்கையிலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டேன். இந்த கூட்டணியிலிருப்பதால் இப்பகுதியில், சிலர் கருப்பு கொடி காட்டப்போவதாக தெரிவித்தார்களாம். அவர்களை கருப்பு கொடி காட்ட போலீஸார் அனுமதிக்க வேண்டும். இவர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காலையில் ஒரு நிலைப்பாடும் மதியம் ஒரு நிலைப்பபாடு எடுத்த கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும்.
மீத்தேன் வாயு திட்டம் தமிழகத்திற்கு வந்தால், விவசாய மாவட்டங்கள் நாசமாகும் என்று தெரிந்தும் மு.க.ஸ்டாலின் பச்சை துரோகம் செய்தார் என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன். 4 முறை மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய 2 ஜி ராஜாவின் நண்பர் சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார்.
ஆற்று மணலில் தினந்தோறும் 90 கோடி ஆளுங்கட்சிக்கு வருமானம் கிடைத்து வருகிறது. தாது மணலில் 60 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது. தாது மணல் ஊழலில் தொடர்புடையவர்கள் தொலைக்காட்சியில் கனிமொழி ஆகியோர் பொய்யான கருத்து கணிப்புகளை வெளியிட்டார்கள். அந்த கருத்து கணிப்பு தேர்தல் முன்பு அவர்கள் எழுதிய சதவீதத்தை விட குறைவாக இருப்பதை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
1996 ஏப்ரல் 9-ந்தேதி மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்த கருணாநிதி,அதற்கு பின்பு 10 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்துவிட்டு, மதுபான கடைகளை மூடாமல், இப்போது, டாஸ்மாக மூடப்போவதாக பித்தலாட்டம் செய்கிறார் என்று பேசினார் வைகோ.

Leave a comment

Your email address will not be published.


*