பெண் உதவியாளரை பலாத்காரம் செய்ய முயன்ற பஞ்சாயத்து தலைவர்: வைரல் வீடியோ

மாண்டியா:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஸ்துரு கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சந்திரகாசா. இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிய அந்த பெண் ஊழியர் மறுநாள் நடந்த சம்பவத்தை சக ஊழியர்களிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நேராக பஞ்சாயத்து தலைவர் சந்திரகாசாவிடம் இதுபற்றி விசாரித்தனர். அவரோ, தரையை சுத்தம் செய்யும்படி சொன்னதாக மழுப்பினார். பின்னர் அங்குள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தபோது, சந்திரகாசா அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், அவரை சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோ ஆதாரமும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற காட்சிகள் அடங்கிய சி.சி.டி.வி. பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a comment

Your email address will not be published.


*