புத்தாண்டு கொண்டாட்டத்தில் குத்தாட்டத்துக்கு தடை பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடைக்காது! சென்னை, டிச. 28-

புத்தாண்டு அன்று பைக் ரோஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடைக்காது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்தியில், புத்தாண்டு அன்று ‛பைக்’ ரேஸில் ஈடுபட்டாலோ, மது அருந்தியிருந்தாலோ, அவர்கள் வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் பெறுவதில் காவல்துறை வழங்கும் தடையில்லா சான்று கிடைக்காது. புத்தாண்டு அன்று டிசம்பர்.31-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 1 மணி வரை சென்னையில் மேம்பாலங்கள் தவிர முக்கிய சாலைகள் மூடப்படும். அதே போன்று டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். சென்னை மெரினாவில் 8 இடங்களில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.


*