புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கும் பணி துவக்கம் – மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் திராஜ் ஜெயின்; தகவல்.

புதுக்கோட்டை.06-

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள பூங்கா நகரில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (பூத் லெவல் ஆபீசர்) பாகம் 128ஐ சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கி வரும் பணியினை மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் (புதுக்கோட்டை மற்றும் திருமயம்) டாக்டர்.திராஜ் ஜெயின், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் (புதுக்கோட்டை மற்றும் திருமயம்) கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 16.05.2016 அன்று நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து வாக்காளர்களுக்கும் இன்று வாக்குச்சீட்டு வழங்கும் பணியினை தொடங்கிட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1238493 அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச்சீட்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலுள்ள 227733 வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அந்தந்த சாவடிகளுக்கு சென்று வீடு, வீடாக வாக்குச்சீட்டை விநியோகிக்க ஏதுவாக, வாக்காளர் பெயர் விபரம், அச்சிடப்பட்ட பதிவேடு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாக்காளர்களிடம் வாக்குச்சீட்டை ஒப்படைத்து முறையாக கையொப்பம் பெற வேண்டும். தற்பொழுது சம்மந்தப்பட்ட வாக்காளரிடமோ அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினரிடமோ வாக்குச்சீட்டை ஒப்படைத்து கையொப்பம் பெற வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையுடன் தேர்தல் விழிப்புணர்வு பேட்;ஜ் அணிந்து செல்ல வேண்டும். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் அதாவது மே 10ம் தேதிக்குள் வாக்குச்சீட்டுகளை வாக்காளர்களிடம் விநியோகிக்க வேண்டும். வாக்குச்சீட்டு வழங்கும் போது வாக்காளர்கள் இல்லை என்றால் வழங்கப்படாமல் உள்ள வாக்குச்சீட்டுகளை அகர வரிசைப்படி அடுக்கி வாக்குச்சாவடி வாரியாக தனித்தனி உறைகளில் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் வாக்காளர் அடையாளச் சீட்டு வரப்பெறாதவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 18004257033 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் (புதுக்கோட்டை மற்றும் திருமயம்) டாக்டர்.திராஜ் ஜெயின், கூறினார்.

இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார்ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், (புதுக்கோட்டை), வட்டாட்சியர் ஜெயபாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*