பாகுபலிக்கு எதிர்ப்பு தெரிவித்த தேசிய விருது இயக்குனர்

April 09

பாகுபலி ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். அதில் பொழுதுபோக்கு தவிர எந்தவொரு சிறப்பம்சமும் இல்லை.

அதனை சிறந்த படமாக தேர்வு செய்ததற்கு இந்தியா முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. சமீபமாக கன்னட சினிமாவின் முக்கிய இயக்குனர், தேசிய விருது வென்ற, கிரிஷ் காசரவள்ளியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

“பாகுபலிக்கு தேசிய விருது அளித்தது குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் படம் சமூதாயத்தின் கஷ்டங்களை பேசும் படமாக அமையவில்லை. தவிர, ஒடுக்கப்பட்ட சமூதாயம் அதில் மோசமாக காட்டப்பட்டுள்ளது” என்றார்.

பாகுபலி போன்ற ஒரு படத்தை, சிறந்த பொழுதுபோக்கு படமாக தேர்வு செய்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவின் சிறந்த படமாக தேசிய விருது அளித்திருப்பது, வெட்கக்கேடானது.

Leave a comment

Your email address will not be published.


*