பறவை காய்ச்சல் நோய் தடுப்பு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி நேரில் ஆய்வு….

ஓசூர், மே 29.:
கர்நாடக மாநிலத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மாநில எல்லையான ஓசூர் பகுதியில் ஜுஜீவாடி, அந்திவாடி, நல்லூர், கக்கனூர், கும்ளாபுரம் ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு பறவை காய்ச்சல் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கர்நாடக, தமிழக நுழைவு பகுதியான ஜுஜு வாடி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நோய் தடுப்பு மையத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு மருந்து தெளிக்கபடுகிறது. இதனை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் P. பாலகிருஷ்ணாரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை அதிகாரிகளுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் 24 மணி நேரமும் விசை தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிக்கவும்,இரவு நேரங்களில் மின் விளக்குகள் அமைத்து, காவல் துறை துணையுடன் மருத்துதெளிக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுருத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் Dr.சிவகிருஷ்ணன், உதவி இயக்குனர் Dr.மணிமாறன், முதன்மை மருத்துவர் Dr.சின்னசாமி, குழு மருத்துவர்கள்Dr.சுகந்தி,Dr. தயாநிதி ஆகியோரு மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், நகர மன்ற துணைதலைவர் ராமு, JP (எ) ஜெயபிரகாஷ், நகர செயலாளர் நாராயணன், அசோகன், ஸ்ரீதர், பிரபாகர் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*