பர்னிச்சர் விற்பனை பிரிதிநிதி லாட்சில் விசம் குடித்து இறப்பு

பொன்னமராவதி,மே-7

பொன்னமராவதியில் உள்ள ஒரு லாட்சில் விசம் குடித்து காரைக்குடியைச்சேர்ந்த பர்னிச்சர் விற்பனை பிரிதிநிதி இறந்துள்ளார். காரைக்குடி அருனாநகரைச்சேர்ந்தவர் நாராயணன் மகன் சண்முகம்(54).இவர் பர்னிச்சர் பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் 5ம் மாலை பொன்னமராவதி பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்சில் ரூம்பு எடுத்து சண்முகம் தங்கியுள்ளார்.; நேற்று 6ம் தேதி காலை ரூம்பை சுத்தம் செய்யவதற்கு அவர் தங்கியிருந்த அறைக்கதை துப்புரவுப்பணியாளர் தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனை பார்த்த லாட்ச் அலுவலர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு எலிமருந்து போன்ற வாடை அடித்துள்ளனர். இது குறித்து பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி,சப்இன்ஸ்பெக்டர்; முத்துக்கருப்பன் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது கருப்பு நிற பேண்ட், ஊதா நிற சட்டை அணிந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார்.அவரின் உடம்பில் பூச்சி மருந்து நாற்றம் அடித்துள்ளனர். இது குறித்து பொன்னமராவதி மேற்கு கிராமநிர்வாக அலுவலர் பாண்டியன் கொடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இறந்தவர். தனது மனைவி விவாகரத்து பெற்றுச்சென்றுவிட்டார். மகள் காதலனுடன் சென்றுவிட்டார். நிம்மதி இல்லாமல் இருப்பதை விட சாவதே மேல் என நினைத்து தற்கொலை செய்துகொள்வதாக ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். இவரது மனைவி தெய்வானை காரைக்குடிப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிவருகின்றார். இவருக்கு ஜோதிராம்(18) என்ற மகனும் மற்றும் இரண்டு மகளும் உள்ளனர். இவரது இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றர்.

Leave a comment

Your email address will not be published.


*