நாட்டில் ஐந்து கோடி வாகன ஓட்டிகள் போலி லைசென்ஸ் வைத்துள்ளனர்: மத்திய அரசு பகீர் தகவல்

புதுடெல்லி:

இந்தியாவில் நடைமுறையில் உள்ள 18 கோடி வாகன ஓட்டுனர் உரிமங்களில் சுமார் 5 கோடியே 40 லட்சம் (மூன்றில் ஒரு பங்கு) உரிமங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. தற்போது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, போலி லைசென்ஸ் வைத்துகொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு வெறும் ஐநூறு ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது.

இந்த அபராதத் தொகையை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்துவதுடன் ஓராண்டு சிறை தண்டனையையும் சேர்த்து விதிப்பது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 18 வயதுக்கு குறைவானவர்கள் லைசென்ஸ் பெறாமல் வாகனம் ஓட்டினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், அந்த வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிசீலிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கான புதிய சட்ட முன்வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

Leave a comment

Your email address will not be published.


*