நாடே பற்றி எரியும்போது, நார்வே புறப்பட்ட ராகுல் காந்தி!

 பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் சார்பில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் பேரணி வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி  நார்வே நாட்டுக்கு புறப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் கூறுகையில் நார்வே வெளியுறவுத் துறையின் அழைப்பின் பேரில் ஆஸ்லோ செல்ல உள்ளேன். ஓரிரு நாள்கள் அங்கு தங்கி, நார்வே அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லாலுவின் பேரணியை புறக்கணிக்கும் நோக்கத்தில்தான் ராகுல் நார்வேக்கு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், ராம் ரஹிமுக்கு எதிரான கோர்ட் தீர்ப்பையடுத்து ஹரியானா, பஞ்சாப், டெல்லி கலவர பூமியாக பற்றியெறிந்த அதே தினத்தில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் துணை தலைவர் வெளிநாடு கிளம்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*