நாகர்கோவில் நகராட்சி மூன்று வார்டுகளை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 100-பேர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்

நாகர்கோவில் 42, 50, 51-வது வார்டுகளை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 100-பேர் கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்.
நாகர்கோவில் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எ.ராஜன் ஏற்பாட்டில் 50-வது வார்டு சகாய ஆன்றனிவிஜு, அருள்பிரபின், ஆன்றோ, ராஜா, ஜெயா, பாபு, சார்லஸ், போஸ்கோ, செந்தில், சுனில், 51-வது வார்டு போஸ், அப்துல்சமது, தா@மராஜ், லீலாபாய், லீனா, சரவணன், மணி, ஸ்டாலின், 42-வது வார்டு சஜுகுமார், ராஜா, மதன், டைட்டஸ், குமார், ஆஸ்டின் உட்பட 100-பேர் கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் எம்.சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணகுமார், கவுன்சிலர் ஜாஸ்மின்சகிலாபாய், தொகுதி கழக செயலாளர் சுகுமாரன், மாவட்ட பிரதிநிதி ரபீக், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் அக்ஷயாகண்ணன், வார்டு கழக செயலாளர் மினிக்கோல், புத்தேரி கவுன்சிலர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர் மனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நல்லபெருமாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*