நத்தம் தாலுகா அலுவலகத்தில் வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

நத்தம், மே 09

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நத்தம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் வேட்பாளர் பெயர் படம் மற்றும் சின்னங்கள் வாக்குபதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டது. நடைபெற இருக்கும் தேர்தலில் 19 பேர் போட்டியிடுகின்றனர். சின்னம் பொருத்தும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாதேவி தலைமையில் உதவி அலுவலர்கள் மாரிமுத்து, சந்திரன் முன்னிலையில் 32 மண்டல அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். இதில் 310 வாக்கு சாவடிகளுக்கு 356 வாக்கு பதிவு இயந்திரங்களில் இந்த பணி நடைபெறுகிறது.

Leave a comment

Your email address will not be published.


*