நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு.. தியேட்டர்கள் மீதான கேளிக்கை வரி ரத்துக்கு கோரிக்கை

சென்னை: திரையரங்குகள் மீதான தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். திரையரங்குகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டிவரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதனால், மாநில அரசால் கேளிக்கை வரியை விதிக்க முடியாது. இருப்பினும் தமிழக அரசோ, 30 சதவீத கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதனால் இரு வரிகளையும் சேர்த்து கட்டும் நிலைக்கு தமிழக சினிமாத்துறை தள்ளப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*