தேர்தல் பணி பயிற்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

உசிலம்பட்டி மே 07

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியில் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணியை பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் வாக்களர் இயந்திரம் எவ்வாறு பயன்படுத்துவது.கட்டுப்பாட்டு கருவியை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.இந்த பயிற்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியாளர் வீரா ரகவராவ் அவர்கள் பார்வையிட்டார்.உசிலை சட்ட மன்ற தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் ,உதவி தேர்தல் அதிகாரிகள் ரவி ,பேரையூர் சிவகுமார் அவர்குளும் வருவாய் ஆய்வாளர்களும் கிராம நிர்வாக அலுவலர்களும் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

Leave a comment

Your email address will not be published.


*