தீரன் பெரிய பாண்டியனை சுட்டது இன்ஸ்பெக்டர் முனிராஜ்? ராஜஸ்தான் போலீஸ் வழக்கால் பகீர்!! சென்னை, டிச. 18-

பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழ்நாடு காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். ‘சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த தமிழக போலீசார், ‘துப்பாக்கி கீழே விழுந்தது தொடர்பாக ராஜஸ்தான் போலீஸில் முனிசேகர் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளார். தற்போது முனிசேகர் சுட்டதாக ராஜஸ்தான் போலீஸார் கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. முனிசேகர் வைத்திருந்தது 9எம்எம் பிஸ்டல். அதன் லாக் ரீலீஸாகி விட்டால் 20 குண்டுகளைச் சுட முடியும். ஆனால் ஒரே ஒரு குண்டு மட்டுமே முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டுள்ளது.
கொள்ளையர்களிடம் துப்பாக்கி கிடைத்திருந்தால் தமிழக போலீஸாரின் கதி பரிதாபமாகிருக்கும். இதுதான் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநில போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திலிருந்தவர்களும் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் வழக்கு

Leave a comment

Your email address will not be published.


*