திருப்பதி வனப்பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு

திருப்பதி, ஏப்.23-
திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கடத்தல்காரர்கள் கல்வீசித் தாக்கியதால், போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். திருப்பதியை அடுத்த தீண்டக்குண்டா வனப்பகுதியில் 15 பேர் செம்மரம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைக் கைது செய்ய போலீசார் முயற்சித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அவர்களைக் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால், அவர்களை எச்சரிக்கும் வகையில் எஸ்.ஐ. விஜய் நரசிம்மலு தலைமையிலான போலீசார் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர். தற்போது அவர்களைப் பிடிக்க 6 பேர் கொண்ட இரு போலீசார் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.


*