சொந்த ஊரான ஆம்பூர் தொகுதியில் பிரேமலதா போட்டி?

ஆம்பூர் April 07:

ஆம்பூரில் சமீபத்தில் தே.மு.தி.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரேமலதா விஜயகாந்த் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மூலம் கருத்து கேட்கப்பட்டது. பிரேமலதாவின் சொந்த ஊர் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம். இவரது தந்தை ஆம்பூர் சர்க்கரை ஆலையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும் பிரேமலதா ஆம்பூர் இந்து மேல்நிலை பள்ளியில் படித்தவர். இதனால் அவர்களுக்கு ஆம்பூர் பகுதியில் உறவினர்கள் நட்பு வட்டம் அதிகமாக உள்ளது.

ஆம்பூரில் பிரேமலதா போட்டியிட்டால் அது அவரது சொந்த தொகுதியாக இருக்கும். வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

பிரேமலதா தேர்தலில் போட்டியிடுவது குறித்தே இன்னும் முடிவு செய்யவில்லை என சிலர் கூறுகின்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் பிரேமலதா தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி.

அதுவும் வேலூர் மாவட்டத்தில் தான் களம் இறங்குவார் என தே.மு.தி.க.வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.


*