சென்னை ஹோட்டலில் அசத்தும் ரோபோக்கள்! சென்னை, டிச.15-

சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் முதன் முறையாக ரோபோக்கள் வெயிட்டர்களாக செயல்பட்டு வருகின்றன.
சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ‘ரோபோட்’ என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக செயல்படுகின்றன. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார். உணவகத்தில் உள்ள மேஜையில் பொருத்தப்பட்டுள்ள ஐ-பேட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். அது டிரான்ஸ்மிட்டர் மூலமாக சமையல் அறைக்கு சென்றடையும். அதைப் பார்க்கும் சமையல்காரர்கள், சமைத்து அதனை ரோபோட்டின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். அது, உணவை வாடிக்கையாளர் டேபிளுக்கு கொண்டு சென்று சேர்க்கும்.
வாடிக்கையாளர் வாசலில் வரும் போதே அவர்களை வரவேற்று மேஜையில் அமர வைப்பதும் ரோபோக்கள் தான். வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்தால், அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும், உணவகத்தில் உள்ள ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எப்போதும், மனிதர்கள் உணவு பரிமாறி பார்த்த வாடிக்கையாளர்க்கு ரோபோர்ட் உணவு கொடுப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த உணவகம் பிரபலமடைந்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published.


*