சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்.. அசின் திட்டவட்டம்

மும்பை: இனி சினிமாவில் தான் நடிக்கப் போவதில்லை என நடிகை அசின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழில் ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான அசின் ‘எம் குமரன் சன் ஃஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த அசின், தமிழின் அடுத்த சிம்ரனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தி ‘கஜினி’ மூலம் தமிழ்நாட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு அசின் மும்பை பறந்து விட்டார். அங்கு ஆமிர்கான், சல்மான் கண், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தொடர் தோல்விப்படங்களால் பாலிவுட்டில் அசினால் நிலைத்து நிற்க முடியவில்லை. இந்நிலையில் மைக்ரோமேக்ஸ் இணை அதிபர் ராகுல் ஷர்மாவுடன், அசினுக்கு காதல் பிறந்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அசின்-ராகுல் ஷர்மா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாக அசின் மீண்டும் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அசின் இந்த வதந்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் “என்னைப் பற்றி பல கற்பனையான தகவல்கள் பரவி வருகின்றன. என்னுடைய திருமணத்திற்கு முன்பே நான் நடிக்க வேண்டிய படங்களை முடித்து விட்டேன். மேலும் விளம்பரப் படங்களின் ஒப்பந்தகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. இனி சினிமா மற்றும் விளம்பரப் படங்கள் எதிலும் நான் நடிக்க மாட்டேன்” இவ்வாறு அசின் தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published.


*