குடிபோதையில் அடித்து துன்புறுத்தும் கணவர்

சாத்தூர், மே.07-

சாத்தூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்த பாண்டிமீனா என்பவர். சென்னையில் வேலைபார்க்கும் போது தன்னுடன் வேலைபார்க்கும் கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சிறிது காலத்திற்கு பிறகு தன்னுடைய ஊருக்கு அழைத்து வந்து குடும்ப நடந்த வந்த இடத்தில் தினந்தோறும் கணவர் கண்ணன் குடிபோதையில் வந்துகொடுமை செய்வதாகவும் திருமணத்தின் போது பாண்டிமீனா 10பவுன் நகையும் கட்டில், பிரோ மற்றும் வீட்டிற்கு தேவையான பொருள்களையும் பாண்டிமீனா வீட்டினர் வாங்க கொடுத்துள்ளனர். தற்போதுகுடிபோதையில் தின்நதோறும் அடித்துஉதைப்பதாகவும், இதைபற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறும்போது இருந்தால் இரு அல்லது இல்லை என்றால் உங்கள் வீட்டிற்கு சென்றுவிடு வீட்டில் உள்ளவர்கள் கண்ணன்,பூங்கோதை,சுமதி,ரமேஷ் ஆகியோர்கள் கொலைமிரட்டல் விடுவதாக பாண்டிமீனா சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தசம்பவம் குறித்துவழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரனை செய்து நான்கு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*