கடவுளே… கடவுளே… ரஜினியை மிரட்டிய ரசிகர்! சென்னை, டிச. 28

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். நேற்றைய சந்திப்பின்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ரஜினி அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். சிலர் ரஜினியின் காலில் விழுந்துவிட்டு பின்னர் போட்டோ எடுத்துக்கொண்டனர். ஆனால், ஒரு ரசிகர் மட்டும் ரஜினியின் அருகில் நின்று கடவுளை வணங்கிவிட்டு, போட்டோ வேண்டாம் என்று கூறி ரஜினியைப் பார்த்துக்கொண்டிருந்தாராம். சபையில் இருந்தவர்கள் ’போட்டோ எடுத்துக்கோ’ என்று கூச்சல் எழுப்பினர். ஆனாலும், அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் ரஜினியையே பார்த்துக்கொண்டு நின்றாராம். `நான் கடவுளைதான் பார்க்க வந்தேன். போட்டோ எடுக்க வரவில்லை’ என்று கூறி 3 நிமிடம் அங்கே நின்றாராம். விசாரித்ததில் அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்று தெரிந்தது.

Leave a comment

Your email address will not be published.


*