ஓசூர் அருள்மிகு மரகதாம்மாள் உடனுரை சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தேர் திருவிழா

ஓசுர், மார்ச் 24:
ஓசூர் அருள்மிகு மரகதாம்மாள் உடனுரை சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தேர் திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இ.ஆ.ப., அவர்கள் தேர்வடம் பிடித்து தொடக்கி வைத்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி தேர்த் திருவிழா நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த எல்.இ.டி. வாகனம் மூலம் 100 சதவித வாக்குப்பதிவு குறித்த குறும்படங்களை ஒளிப்பரப்புவதை துவக்கிவைத்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் துன்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்பு இத்தேர் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருக்கோயில் வளாகத்தில் மாதிரி வாக்குபதிவு அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் திரு.சி.கதிரவன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் புரசீடிங் ஆபிசர் போலிங் ஆபீசர்-1, போலிங் ஆபிசர்-2, போலிங் ஆபீசர்-3, வோட்டிங் கம்பார்ட்மெண்ட் உள்ளிட்ட மாதிரியானது அம் மையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது. இம் மாதிரி வாக்கு சாவடி மையத்தினை தேர்திருவிழாவிற்க்கு வருகை தந்த பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய விழிப்புணர்வு குறித்த குரும்படம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்புத் துறை எல்.இ.டி. வீடியோ மின்னனு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வை விளம்பரத்தினை துவக்கி வைத்து திருவிழாவிற்கு வருகை தந்து கொண்டிருக்க கூடிய பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவார் திரு.சி.கதிரவன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பொதுமக்களிடம் வரும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் வாக்களித்து ஜனநாயக கடடை ஆற்றிட வேண்டும் என தேரிவித்தார்.
இந்த விழ்ப்புணர்வு விளம்பர வாகனத்தின் மூலம் விளம்பரப்படுத்தப்பட்ட குருந்தகடு விழிப்புணர்வை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியின் போது சார் ஆட்சியர் டாக்டா;.கே.செந்தில்ராஜ் இ.ஆ.ப., இந்து சமய அறநிலையங்கள் துறை உதவி ஆணையர் திருமதி.சி.நித்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.சேகர், நகராட்சி ஆணையர் திரு.பாலகிருஷ்ணா, நகராட்சி பொறியாளர் திரு.குருசாமி, செயல் அலுவலர் திரு.பெ.ராஜரத்தினம், ஆய்வாளர்கள் திரு.மு.செந்தில் குமார், திருமதி.பாண்டியம்மா, நகராட்சி கட்டிட ஆய்வாளர் திரு.பாலசுப்பிரமணி, துப்புரவு ஆய்வாளர் திரு.சந்தரமூர்த்தி, பாகலூர் வருவாய் ஆய்வாளர் திரு.ஜி.மோகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*