ஓசியில் செல்போன் கொடுக்காததால் கடை ஊழியரை கடத்தி தாக்குதல்

பெரம்பூர், நவ. 16–
கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் பாலம் அருகே உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். இவர் கடையில் இருந்தபோது 3 பேர் கும்பல் ஓசியில் செல்போன் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை வெங்கடேசன் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் வெங்கடேசனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சிறிது தூரத்தில் வைத்து தாக்கினர். தகவல் அறிந்ததும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ரத்னவேல் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனை மீட்டு ஒருவனை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த எபனேசர் என்பதும் தப்பி ஓடியவர்கள் அவரது கூட்டாளிகள் பிரிட்டோ, அப்பாஸ் என்றும் தெரிந்தது.

Leave a comment

Your email address will not be published.


*