ஓபிஎஸ்க்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்? கலைச்செல்வன்

 

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் தினகரன் வீட்டில் அவரைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், 122 எம்எல்ஏக்களில் ஒருவரை துணை முதல்வராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என்றார்.என்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது என்றும் கலைச்செல்வன் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.


*