ஒட்டன்சத்திரம் பகுதியில் சேமிப்பு பட்டறைகளில் வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகல் – விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்.மே.7
ஒட்டன்சத்திரம் பகுதியில் சேமிப்பு பட்டறைகளில் வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகல் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, காவேரியம்மாபட்டி, சாமியார்புதூர், ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த சின்னவெங்காயத்தை சேமிப்பு பட்டறைகளில் கடந்த மாதம் சேமித்து வைத்திருந்தனர். கடுமையான வெய்யில் மற்றும் அக்கினி நட்சத்தர வெய்யில் காரணமாக சேமிப்பு பட்டறைகளில் வைக்கப்பட்டிருந்த வெங்காயம் அழுகியது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஒட்டன்சத்திரம் பகுதிகளில் வெங்காய வரத்து குறைந்ததால் விலை உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டில் 10 கிலோ சின்னவெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை மொத்த வியாபாரிகளால் கொல்முதல் செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவு காரணமாக 10 கிலோ சின்னவெங்காயம் ரூ.300 முதல் ரூ.400 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பபடுகிறது.

Leave a comment

Your email address will not be published.


*