ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க நாளை பிரதமர் மோடி வருகை! பாதுகாப்பு வளையத்தில் கன்னியாகுமரி!! நாகர்கோவில், டிச.18-

New Delhi: Prime Minister Narendra Modi addressing at the launch of a new mobile app 'BHIM' to encourage e-transactions during the ''Digital Mela'' at Talkatora Stadium in New Delhi on Friday. PTI Photo by Subhav Shukla (PTI12_30_2016_000126A)

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி நாளை (19-ம் தேதி) வருகை தர இருக்கிறார்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பார்வையிடும் பகுதிகள் முழுவதும் போலீஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் பகுதியில் போலீஸார் தற்காலிகக் கூடாரம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் பற்றிய விபரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இன்றும், நாளையும் ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் வாடைகைக்கு விடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியின் நுழைவு வாயிலான விவேகானந்தபுரம், கடற்கரை பகுதியில் உள்ள ரவுண்டானா, ஹெலிபேட் அமைந்துள்ள பகுதி, பிரதமர் மோடி, மீனவர்களையும், விவசாயிகளையும் சந்திக்கும் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் தடுப்புகளை வைத்துள்ளனர். இந்த பகுதிகளுக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கன்னியாகுமரி பகுதியை முழுமையாக போலீஸார் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.


*