இரு அமைப்பினர் 60 பெண்கள் உட்பட 150 பேர் அதிமுகவில் இணைந்தனர்

ராஜபாளையம், மே.09

ராஜபாளையம் குவைத்ராஜா மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரும், தென்றல் நகர் ஜெய்ஹிந்த் நற்பணி மன்றம் மற்றும் கக்கன்ஜி ஆட்டோ சங்கம் ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் தலைமையில் 60 பெண்கள் உட்பட 150 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள அதிமுக தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் இணைப்பு விழா நடந்தது.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் செல்வ சுப்பிரமணியராஜா, மாவட்ட முன்னாள் செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர்முன்னிலையில் தென்றல் நகரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமான 150 பேர்கள் அதிமுகவில் இணைந்தனர்.அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ். ஷியாம் அனைவருக்கும் சால்வைகள் அணிவித்தும், வேஷ்டி சேலைகள் வழங்கியும் வரவேற்றார்.

இணைப்பு விழாவில் தொகுதி செயலாளர் வனராஜ், ஒன்றிய செயலாளர் குருசாமி, நகர செயலாளர் பாஸ்கரன், பூபதிராஜூ கூட்டுறவு பேங்க் தலைவர் மணிகண்டராஜா, இளைஞர் பாசரை செயலாளர் சங்கர்ராம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.கதிர்வேல் தலைமையில் இணைந்த நற்பணி மன்றத்தினர், ஆட்டோ சங்கத்தினர் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு உழைப்போம் என வாக்குறுதி கொடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published.


*