ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்கய்யா… சசி குடும்பத்தின் மிடாஸ் ஆலையில் மீண்டும் ரெய்டு! தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையா? சென்னை, டிச. 28-

தாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது.
சசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த நவம்பர் 9-ம் தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் தாம்பரம் அருகே படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை மணிமங்கலத்தில் உள்ள சாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 4 அதிகாரிகள் கடந்த 3 மணிநேரம் ஆக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையான டி.டி.வி. தினகரன் ஆளும் அதிமுகவை படுதோல்வியடைய செய்து வரலாற்று வெற்றி பெற்றார். இதில் திமுக, பா.ஜ. உள்ளிட்ட 57 வேட்பாளர்களின் டெபாசிட் பறிபோனது. இந்த பின்னணியில் நடக்கும் ரெய்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*