அரிமளம் பகுதியில் வாக்குசேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர் வைரமுத்துவுக்கு உற்சாக வரவேற்பு

அரிமளம் மே.09-

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுததியில் திருமயம் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் பி.கே. வைரமுத்து மேல்நிலைபட்டி, ஊசிலம்பட்டி பூனையன்குடியிருப்பு, கும்மங்குடி, கல்லுகுடியிருப்பு, தாஞ்சூர், காமராஜபுரம், கீழப்பனையூர், அரிமளம், அரிமளம் பள்ளிவாசல், மயிலாடும்பாறை, எட்டாம்மண்டகபடி, மார்க்கெட்;, ஒணாங்குடி, சத்திரம், சீகம்பட்டி, வடக்குபொன்னம்பட்டி, உள்ளிட்ட 64க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்குகள் சேகரித்தார்.

வேட்பாளர் பி.கே.வைரமுத்து-வை கண்டவுடன் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். கிராமங்கள் தோறும் வழிநெடுங்கலும் பெண்கள் இரட்டை இலை சின்னத்தை வரைந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள், புதிய வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வயதானவர்கள் வெற்றி நிச்சயம் என ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அங்கு பேசிய வேட்பாளர் பி.கே. வைரமுத்து உங்கள் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து உங்களுக்காக உழைக்க தொண்டு செய்ய உங்களில் ஒருவனாக செயல்பட உள்ளேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நாடுபோற்றும் நல்லாட்சியில் ஏழை எளியோர் ஊனமுற்றேர், முதியோர், மாணவ மாணவிகள் ஆகியோருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, பாடபுத்தகங்கள், காலணிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட 16 வகையான உபகரணங்கள் வழங்கியுள்ளார். புரட்சிதலைவி அம்மா தேர்தல் அறிக்கையில் குடும்பத்திற்கு ஒரு செல் போன், தாலிக்கு தங்கம் 1பவுன், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விலையில்லா ஆடுகள், கறவைமாடுகள் வழங்கப்படும். பெண்கள் மோட்டார்சைக்கிள் வாங்க 50 சதவீத மானியம், 100யூனிட் வரை வீடுகளுக்கு கரண்ட் இலவசம், கல்வி கடன் ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, மது விலக்கு அமுல்படுத்தபடும் உள்ளிட்ட எண்ணற்ற சலுகைகளை வழங்கி உள்ளார்கள், இவை அனைத்தையும் பெற்று பயன் அடைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்மாறு கேட்டுகொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் பழனியப்பன், ஒன்றிய குழு தலைவர் எம்.எம்.கணேசன், தொகுதி இணைச் செயலாளர் எஸ்.திலகர், பேரூராட்சி செயராளர் மாரியப்பன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மணிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய பொருளாளர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாத்தையா, முத்து, சுப்பிரமணியன்,ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெற்றிவேல், கருப்பையாபாலன், ரெங்கசாமி, அரசு ஒப்பந்தகாரர் கே.புதுப்பட்டி முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எம்.பி. நடேசன், சத்திரம் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, ராமநாதன், அரிமளம் பாலமுருகன், சத்திரம்தமிழ்வேல், முத்துராமன், பேப்பர் செல்லையா, திருப்பதி, ஆனைவாரிபழனிவேலு, ஜெய்லாவுதீன், ஜபருல்லா, அரிமளம் சுப்பையா, பாத்திரகடை மாரிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*