அம்மாவின் தேர்தல் அறிக்கை பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும் ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளர் கே.கிட்டுசாமி பேச்சு

ஒட்டன்சத்திரம்.மே 07

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அதிமுக வேட்பாளர் கே.கிட்டுசாமி ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

அஇஅதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனையை விளக்கி பரப்புரை செய்தார். அம்மா சிமெண்ட், அம்மா உணவகம், அம்மா குடிநீர் உட்பட பல்வேறு நலத்திட்டங்களையும், ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் சிறப்பான பல திட்டங்களை செய்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பஸ் பாஸ், விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, நோட்டு புத்தகம் உள்பட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார். பிறந்த குழந்தைக்கு அம்மா பெட்டகம் மேலும் அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளான அம்மா பேங்கிங் கார்டு, கட்டணமில்லா மின்சாரம், உலமாக்கள் ஓய்வூதியம் உயர்த்தியது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைபேசி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி ஆகியவற்றை விளக்கி பேசி மூனூர், நாகப்பன்பட்டி, பருமரத்துப்பட்டி, சின்னமல்லையாபுரம், சின்னமல்லையாபுரம், குப்பணபாளையம், சக்கம்பட்டி, பாலமரத்துப்பட்டி, கிருஷ்ணாபுரம், ஐ.வாடிப்பட்டி, கொ.கீரனூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள் மகிழச்சியுடன் ஆராத்தி எடுத்து சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் கே.பி.நல்லசாமி, ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தில் வடகாடு, வண்டிப்பாதை, மேட்டுப்பட்டி, கண்ணணூர், கும்ளாமரத்துப்பட்டி, பால்கடை, சிறுவாட்டுக்காடு, புலிக்குத்திக்காடு, லெக்கையன்கோட்டை, சாலைப்புதூர், புது அத்திக்கோம்பை, குமாரசாமிகவுண்டன்புதூர், கொல்லப்பட்டி, வெள்ளியன்வலசு, வெரியப்பூர், காளிபாளையம் ஆகிய பகுதிகளில் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஐந்தாண்டு திட்டங்களான விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், சூரிய மின் சக்தியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீட்டுத்திட்டம், முதலமைச்சரின் மருத்துவ காப்பிட்டு திட்டம், உழவர் காப்பிட்டு திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், இலவச மடிக்கணினி ஆகிய சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.
இதில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கே.பி.நல்லசாமி, ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணி, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*